பிரித்தானியாவின் – வடக்கு மான்செஸ்டரில் 14 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) வெள்ளிக்கிழமை மாலை குறித்த சிறுவன் ஹார்பர்ஹேயின் டேவிஸ்டாக் சதுக்கத்தில் கத்தியால் குத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த பிரித்தானிய பொலிஸார் குறித்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு அவர் பாரிய காயங்கள் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக இறந்தார் என்று கிரேட்டர் மான்செஸ்டர் போலீசார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த கொலையுடன் சம்பத்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றொரு 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.