துருக்கியில் நிலநடுக்கம் இரவு முழுவதும் வீதிகளில் மக்கள்!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் பெரும்பாலான குடிமக்கள் இரவு முழுவதும் திறந்த வெளியில் கழித்துள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.  சுமார் 1.6 கோடி மக்கள் வாழும் அந்நகரத்தில் இந்நிலநடுக்கம் பதிவானதைத் தொடர்ந்து 180 இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய இஸ்தான்புல் மக்கள் நேற்று முன்தினம் முதல் அங்குள்ள வீதிகள் மற்றும் திறந்தவெளியில் கழித்து வருவதாகவும் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கு அவர்கள் அச்சப்படுதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  நிலநடுக்கத்தினால், தங்களது வீடுகள் இடிந்து விழக்கூடும் எனும் அச்சத்தில் பெரும்பாலானோர் அவர்களது வாகனங்களிலும், பூங்காக்களில் கூடாரம் அமைத்தும் தங்கியுள்ளனர். மேலும், அங்கு இரவில் வெப்பநிலைக் குறைந்து குளிர் அதிகரித்ததினால் பெரும்பாலானோர் தீ மூட்டி குளிர் காய்ந்ததாகக் கூறியுள்ளனர்.

நேற்று முன்தினம் இஸ்தான்புல் நகரத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள மர்மரா கடலுக்கு அருகிலுள்ள பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் அந்நகரம் முழுவதும் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டது. ஆனால், எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டாலும் கட்டடங்களிலிருந்து தப்பிக்க முயன்று அதிலிருந்து குதித்து காயமடைந்த 236-க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *