மட்டக்களப்பு- வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
46 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான ந.புவனேந்திரராசா என்பவரது உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி பொலிஸார், மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு தடயவியல் பொலிஸாரும் ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் சிலர் அங்குள்ள வயல் பகுதியில் வைத்து மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அவ்வாறு மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திக் கொண்டிருந்த 3 பேரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்துள்ளனர்.