இன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை (13) காலை 8.00 மணிவரை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோயாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறுநீரக வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை மகப்பேற்றுவைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை ஆகிய விசேட தேவையுடைய வைத்தியசாலைகளில் வழமை போல வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர தேவைகளின் போது கடமையில் ஈடுபட தாயாராக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொரிவித்துள்ளது.