புனரமைக்கபட்ட இனுவில் மத்திய பேருந்து தரிப்பிடம் மக்கள் பாவனைக்காக திறப்பு!

இனுவில் மத்திய பேருந்து தரிப்பிடம் புனரமைக்கபட்டு இன்று(04) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இனுவில் புகையிரத கடவையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த ஆனந்தராசா சயந்தனின் நினைவாக பல்வேறு நிகழ்வுகள் இனுவில் இந்து  விளையாட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், 1958 ஆம் இனுவில் இந்து விளையாட்டு கழகத்தினால் அமைக்கப்பட்ட கருவில் மத்திய பேருந்து தரிப்பிடத்தையும் புனரமைத்து ஆனந்தராசா சயந்தனின் நினைவாக திறந்து வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில், இணுவில் மத்திய கல்லூரி அதிபர் துரைசிங்கம் , இனுவில் தென்னிந்திய திருச்சபை லங்கேஸாவரன், அருட்தந்தை, மக்லியோட் மருத்துவமனை நிர்வாக உத்தியோகத்தர், பிரதேசசபை முன்னாள் உறுப்பினர்களான தனகோபி, உதயகுமாரன் இனுவில் இந்து விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *