வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் (தேர் திருவிழா) இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அலங்கரிக்கப்பட்ட இரதத்தில்(தேரில்) முருகப்பெருமான் வீதியுலா வந்தார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கப்பிரததிஸ்டை செய்ய ஏராளமான பெண்கள் கற்பூரச்சட்டியோடு தேரின் முன்னும், பின்னும் அஎன்றதை காண முடிந்தது.
இவ் வாலயத்திற்கு இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள்தே நல்லூர் கந்தன் தேர் திருவிழாவை காண வருடா வருடம் வருவது இங்கு குறீப்பிடத்தக்கது.