அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காலம் தாழ்த்தாது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியபோதே, அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நீதி அமைச்சர் வழங்கியுள்ளார்.