யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணும் நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு – கலகம் அடக்கும் படையும் குவிப்பு!

பாராளுமன்றத் தேர்தலின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை அதிகளவான சுயேட்சைக் குழுக்களும், கட்சிகளும் போட்டியிட்டுள்ள நிலையில் அவர்களுக்கிடையேயான கருத்து மோதல்கள், கட்சி பிளவுகள் காரணமாக வன்முறைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சற்று முன்னர் கலகத் தடுப்பு பொலிஸாரும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *