அண்மையில் பிணையில் விடுதலையாகி வெளிவந்து சுயேட்சைக்குழு 17 இல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வைத்தியர் அருச்சுனாவிற்கு மன்னார் நீதாவன் நீதிமன்றம் இன்று(30) பிடியாணை பிறப்பித்துள்ளது.
மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வைத்தியர் மன்றில் முன்னிலையாகாத நிலையில் மன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.