கற்கோவளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட கணவனும், மனைவியும்!

யாழ் மாவட்டம் – கற்கோவளம் கிராமத்தின், ஐயனார் கோவிலடியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடும் 53 வயதான மாணிக்கம்  சுப்பிரமணியம் என்பவரும்  54 வயதுடைய மேரி என அடையாளம் காண்ப்பட்டுள்ளனர். 

பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளதாகவும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *