இன்று ‘ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர் படுகொலை நாள்”.

அடக்குமுறைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் உண்மையை வெளிப்படுத்தி, அழிவுகளை தடுப்பதற்காகவும், மக்களாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் ஓங்கி ஒலித்து மரணத்தை தழுவியவர்கள் பல ஈழத் தமிழ் ஊடகவியலாளர்கள்.

நடப்பவற்றை வெறும் செய்திகளாக வழங்காமல், அதனை தடுப்பதற்காக பொறுப்புணர்வுடன் செயற்பட்டவர்கள் பல ஈழத் தமிழ் ஊடகப் பணியாளர்கள். அதனாலேயே, தமிழர் தேசத்துக்கு எதிராக பெரும் அநீதிகளும் பேரழிவுகளும் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர், ஈழத் தமிழ் ஊடகப் பணியாளர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள்.

இதனால், 19 ஒக்டோபர் 2000 தொடக்கம் 18 மே 2009 வரையான சுமார் எட்டரை ஆண்டுகளில் 43 ஈழத் தமிழ் ஊடகப் பணியாளர்களை ஈழத் தமிழ் ஊடகத்துறை இழந்துள்ளது.

தம் உயிரை துச்சமென எண்ணி அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் உண்மைகளை வெளிக்கொணர இறுதி மூச்சுவரை அர்ப்பணிப்போடு உழைத்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *