அனுர ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சும், பொறுப்புக்களும்:

இலங்கையின் 9வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திஸ்ஸனாயக்கவின் ஆட்சியில் ஒரு பிரதமர், ஒரு அமைச்சர், ஒரு பாதுகாப்பு செயலாளர் என மூவர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கீழ் பல அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்….

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கீழ்:

01. பாதுகாப்பு
02. நிதி, பொருளாதார அபிவிருத்தி, தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா
03. வலுசக்தி
04. விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கீழ்:

05. நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில்
06. கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்
07. மகளிர், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு
08. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி
09. சுகாதாரம்

விஜித ஹேரத்வின் கீழ்:

10. புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை
11. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து
12. பொதுமக்கள் பாதுகாப்பு
13. வெளிவிவகாரம்
14. சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
15. கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு  மற்றும் நிர்மாணத்துறை

இதேவேளை மேற்கண்ட அமைச்சுக்களின் செயலாளர்களாக…

01. ஜீ.பீ.சுபுதந்திரி – பிரதமரின் செயலாளர்

02. டபிள்யூ.எம்.டீ.ஜே.பெர்னாண்டோ – அமைச்சரவையின் செயலாளர்

03. கே.டீ.எஸ். ருவன்சந்திர – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு

04. கே.எம்.எம்.சிறிவர்தன – நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு

05. அருணி விஜேவர்தன – வெளிவகார அமைச்சு

06. ஜே.எம்.டீ.ஜயசுந்தர – கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

07. கே.மஹேசன் – மகளிர்,சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு

08. எம்.எம்.நயிமுதீன் – வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சு

09. ஏ.எம்.பீ.எம்.பீ. அத்தபத்து – கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு

10. பாலித குணரத்ன – மஹீபால சுகாதார அமைச்சு

11. டபிள்யூ.பீ.பீ. யசரத்ன – நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு

12. பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி – சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு

13. எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க – விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு

14. எச்.எஸ்.எஸ். துய்யகொந்த – பாதுகாப்பு அமைச்சு

15. டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

16. ரஞ்சித் ஆரியரத்ன – புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு

17. பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால – வலுசக்தி அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *