நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம்!

இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல்  நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு “பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால்” இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் தங்களது ஆவணங்கள், விமான பயணச் சீட்டுகளை தம்வசம் வைத்திருத்தல் அவசியமாகும்.

மேலும்,  தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் அலுவலக அனுமதிப்பத்திரம் மற்றும் ஊழியர் அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *