இலங்கையின், 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகிறது.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகின்றது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 22 வேட்பாளர்களும் வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும் 15 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலையொட்டி நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.