காதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த பிரேரணை தொடர்பில் கடந்த இரண்டு நாட்களும் விவாதம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்துள்ளதுடன் அதற்கு ஆதரவாக தங்களது தரப்பினர் வாக்களிப்பார்கள் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்கட்சி முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரவும் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி இதுவரையில் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் சிலர் குறித்த அவநம்பிக்கைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், தேசிய மக்கள் சக்தி தங்களது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.