உக்ரேன் – போல்டவா (Poltava) நகர் மீது ரஷ்யா னடாத்திய ஏவுகணை தாக்குதலில் 51 படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 200 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேன் அறிவித்துள்ளது.
இத் தாக்குதலில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஒன்றும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மை காலமாக ரஷ்யாவுக்குள் ஊடுருவி சில கிராமங்களை தாம் கைப்பற்றி ரஷ்யாவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திவருவதாக கூறிவந்த உக்ரேனுக்கு ரஷ்யாவின் இத் திடீர் தாக்குதல் பெரும் சேதத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.