இன்று(26) அதிகாலை கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள தொடர்மாடிக் கட்டிடத்தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Dagenham பிரதேசத்தில் Freshwater Road இல் அமைந்துள்ள engulfs tower இலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து டெனம், இல்பேட், றொம்பேட் பகுதிகளில் இருந்து வரவளைக்கப்பட்ட 40 தீயணைப்பு வாகனங்களும், 225 தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதுவரை அக் கட்டிடத்தொகுதியில் இருந்து 100 பேர் வரையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், நால்வர் காயங்கள், மற்றும் புகைமூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவ்விடத்தில் பொறுப்பாக நின்ற தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, அப்பிரதேசங்களை கரிய புகை சூழ்ந்துள்ளதால் அப்பிரதேசத்தை அண்மித்த உள்ளூர் வாசிகளுக்கு வீட்டின் ஜன்னல்களை மூடியிருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.