அண்மையில் கட்சியை ஆரம்பித்து, இன்று தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இலட்சிய உறுதியுடன் தமிழக அரசியலில் வாகை சூட வாழ்த்துகள் என சீமான் வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பில் X தளத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும் விஜய், இலட்சிய உறுதியுடன் தமிழக அரசியலில் வாகை சூட வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார்.