T20 – இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றி!

ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றிருந்தது.

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதற்கமைய இலங்கை அணி இந்த போட்டியில் 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *