வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக உருவாகலாமென, இலங்கை மற்றும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களங்கள் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு தாழமுக்கம் உருவாகியுள்ளது. இந்த தாழமுக்கம் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைந்து, நாளை (25) அது சூறாவளியாக உருவாகலாமெனவும், அந்த நிலையங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சூறாவளிக்கு ஓமான் நாடு ரீ மெல் என்று பெயரிடப்படவுள்ளதுடன், இந்த சூறாவளி நாளை பிற்பகலில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கப்பகுதியினூடாக கல்கத்தாவை ஊடறுத்து செல்லலாமென்று எதிர்பார்ப்பதாகவும், அந்த நிலையங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு கடல் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றானது 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.