மன்னார் மாவட்டத்தில் வெற்றிடமாக இருந்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி பதவிக்கு திருமதி ஜீடிற் ஷியாமினி தயாளராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் திடீர் இறப்பு விசாரணை அதிகாரியாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவினால் இன்று திங்கட்கிழமை(13) இந்நியமனம் வழங்கப்பட்டது.
திருமதி ஜீடிற் ஷியாமினி தயாளராஜன் அவர்கள் கடந்த ஆறு வருடங்களாக நீதி அமைச்சின் கீழ் இயங்கும் மத்தியஸ்தர் சபை மத்தியஸ்தராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.