வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒருவருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேணுவதற்கும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை நடைமுறைப்படுத்துவதற்கும் நேற்றைய தினம் (06) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு வெளிநாட்டவர் நாட்டிற்குள் நுழையும் போது தொடர்புடைய விசாக்களை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் குடிவரவுத் திணைக்களம் ஏற்கும் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.