வவுனியா பொது வைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர் குழு ஒன்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை இரவு 11மணியளவில் வைத்தியசாலையில் நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக இளைஞர்கள் குழு ஒன்று வருகைதந்துள்ளது.
இதன்போது கடமையிலிருந்த காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறியது. சம்பவத்தில் தாக்குதலுக்கிலக்கான காவலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.