மடுமாதா திருச்சொருபம் 50 ஆண்டுகளுக்கு பின் நேற்று யாழ் மாவட்டத்திற்கு ஊர்தி பவனியாக எடுத்து வரப்பட்டது. இதன் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மடுமாதாவின் முடிசூட்டுவிழாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடுமாதா திருச்சொருபம் மன்னார் மற்றும் யாழ் மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
இந் நிலையில் நேற்றுக் காலை மன்னார் மறைமாவட்டத்திடமிருந்து யாழ் மறைமாவட்டத்திற்கு மடு மாதா திருச் சொருபம் கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர் நேற்றுக் காலை 11 மணியளவில் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் வைக்கப்பட்டு யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி இடம்பெற்றது.
இதன் பின்னர் மடுமாதா சொரூபம் கிளிநொச்சி மறைக் கோட்டம் மற்றும் முல்லைத்தீவு மறைக் கோட்டம் என்பவற்றுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.