சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரது பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சாந்தனின் பூதவுடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமது உத்தியோகபூர்வ X சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாக அவர் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமது நண்பன் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன், நளினி ஆகியோர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சாந்தன் இறுதியாக எழுதிய கடிதம் என்ற வகையில் அவருடைய கையெழுத்துடனான கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.