ஐ.நாவின் ஆலோசனைகள் எதிர்மறையானவையாம் : நீதியமைச்சர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றில் இணையப்பாதுகாப்புச் சட்டம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களின் செயற்பாடுகளின் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை என்றும், அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிவில் சமூகத்தினர் சில சட்டங்களை மாற்றவேண்டும் எனத் தெரிவித்துள்ளதால் நாங்கள் எங்கள் சமூகத்தினருடன் மட்டுமே கலந்துரையாடுவோம். மாறாக சர்வதேச நிபுணர்களுடன் அல்ல எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *