முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளது.
இதேவேளை போலி (Human Immunoglobulin) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.