படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் விடுதலை!

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி உரும்பிராயைச் சேர்ந்த 23 வயதான ரஜினி வேலாயுதபிள்ளை என்ற யுவதி கோண்டாவில் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இராணுவ சிப்பாய் ஹெவாபீடிகே சரத்சந்திர மற்றும் கோப்ரல் கமகே கித்சிறி ஆகிய இரு பிரதிவாதிகளும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

மூன்றாவது பிரதிவாதியான கோப்ரல் காமினி சமன் லியனகேவை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *