இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ உட்படலானோரிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ உட்பட்டவர்களிடம் பொறுப்பு என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அகில இலங்கை நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் மிலிந்த பிரேமரத்ன, இந்த வழக்குகளை சிவில் வணிக நீதிமன்றத்தில் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாமென தமக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.