மேற்கு லண்டனில் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சீக்கிய இளைஞரின் புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமையன்று, காலை, Hounslow பகுதியில் சிலர் சண்டையிட்டுக்கொள்வதாக தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
அப்போது, அங்கு இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார். அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது பெயர் சமர்ஜீத் சிங் ( Simarjeet Singh Nangpal, 17) என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, முறையே, 21, 27, 31 மற்றும் 71 வயதுடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், இந்த தாக்குதல் தொடர்பாக யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.