ஆறு வார காலப்பகுதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் சாத்தியம் – ஐ.நா

இஸ்ரேலின் வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்களினால் எதிர்வரும் ஆறு வார காலப்பகுதியில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்ட நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனால் பாலஸ்தீனத்தில் 34 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த தாக்கதலினால் இதுவரையில் காஸா பகுதியிலுள்ள 41,000 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 15 இலட்சத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 18 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *