நாட்டில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் தொடர்ந்து 217 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மருத்து தட்டுப்பாட்டுகள் சற்று குறைந்துள்ள போதிலும், வரவிருக்கும் மாதங்களில் மீதமுள்ள தட்டுப்பாட்டை 100 ஆக குறைக்க வேண்டி தேவையுள்ளது.
எனினும், 14 உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 1,300 மருந்துகளில், 383 அத்தியாவசியமானதாகக் கருதப்படுவதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளை விரைவில் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.