33 வருடங்களின் பின் தமது சொந்த இடத்திற்கு திரும்பும் மக்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதி கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அப்பகுதியில் நிலைகொண்டு இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

அப்பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாததால், மக்கள் மீள் குடியேற முடியாத நிலைமை காணப்பட்டதனால் அப்பகுதி ஆட்களற்ற சூனிய பிரதேசமாக காணப்பட்டது. இதனை திருட்டு கும்பல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வீடுகளை உடைத்து, கதவு, ஜன்னல்கள், அதன் நிலைகள் மற்றும் இரும்புகள் என்பவற்றை களவாடி சென்றுவந்தனர்.

அதனால் கவலையடைந்த மக்கள் தம்மை மீள் குடியேற தற்போது அனுமதிக்கா விடினும் , எங்கள் காணிகளை எல்லைப்படுத்தி காணிகளை அறிக்கைப்படுத்த அனுமதிக்க  வேண்டும் என கடிதம் மூலம் தெல்லிப்பளை செயலரிடம் கோரப்பட்டதை அடுத்து வேலி அடைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. 

அனிமதி கிடைத்த நிலையில் காணி உரிமையாளர்கள் தற்போது தமது காணிகளை எல்லைப்படுத்தி வேலிகளை அடைத்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *