மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறிய குற்ரச்சாட்டில் தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 09 இல் நடத்தத் தவறியதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதான மனு மீதான பரிசீலனை இன்று (02) 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வுடன் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் PAFFREL அமைப்பினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.