நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் 13 தேர்தல் மாவட்டங்களில் 80 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியுள்ளது.
இதே வேளை குறித்த 13 தேர்தல் மாவட்டங்களிலும் இரண்டாம் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி 21 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த கால பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன 2 ஆசனங்களை மட்டும் பெற்றுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை எந்த ஆசனங்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.