நடைபெற்று முடிந்த இலங்கையின் 10வது பாராளுமன்ற தேர்தலில் 68,63,186 வாக்குகளை பெற்று 141 ஆசனங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தை நிலைநாட்டியுள்ளது ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி.
ஐக்கிய மக்கள் சக்தி 19,68,716 வாக்குகளை பெற்று 35 ஆசனங்களை கைப்பற்றி எதிர்கட்சியாக உருவாகியுள்ளது.
மூன்றாம் இடத்தில் இலங்கை தமிழரசு கட்சி 2,57,813 வாக்குகளை பெற்று மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும், அம்பாறையில் 1 ஆசனத்தையும், திருகோணமலையில் 1 ஆசனத்தையும், வன்னியில் 1 ஆசனத்தையும், யாழ்ப்பாணத்தில் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் படு தோல்வியை தழுவியுள்ளன.