கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவரை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார்.
கடந்த 2019 ஆண்டு தை மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதான மூவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.