வட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீரப்பு போராட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது. மற்றும் மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரையில் உரிய தரப்பினரால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.