2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் பெப்ரவரி 18 முதல் மார்ச் 21 வரை:

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை 2025 பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025 ஜனவரி 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *