1,800 மில்லியன் ரூபா பண மோசடி செய்த நபர் விமான நிலையத்தில் கைது!

1,800 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பி சென்று மலேசியாவில் இருந்துவிட்டு தற்போது இலங்கை வருகைதந்த சந்தேகநபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

52 வயதுடைய குறித்த சந்தேகநபர் பிரிமிட் வர்த்தகம் ஊடாக சுமார் 1,800 மில்லியன் ரூபா பண மோசடியை செய்துவிட்டு, ஒரு வருடத்திற்கு முன்னதாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்ற அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *