நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகினையும் காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதோடு, அங்கு வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.