25 சிறார்கள் உள்ளடங்கலாக 103 வேற்று நாட்டு பயணிகளுடன் படகு ஒன்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இன்று (19) கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய படகு மியன்மாரில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படகில் ஆபத்தான நிலையில் தவித்துக்கொண்டிருந்த பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினரும், கடற்படையினரும் செயற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த படகில் இருந்து மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்கு குடி நீர், தேனீர், மற்றும் உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள்,
மீட்கப்பட்ட பயணிகளில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.