முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகம் மீது 2006.08.14 ஆம் திகதியன்று இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் அதே சம்பவத்தில் கொல்லப்பட்ட 4 பணியாளர்களதும் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மக்கள் ஒன்று கூடி விளக்கேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இன்று (14) இடம்பெற்ற இந்த நிகழ்வில், விமானத்தாக்குதல் நடைபெற்ற அந்த நேரத்தில் சுடரேற்றப்பட்டு மக்கள் கண்ணீர்மல்க உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகன் , இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.