பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான நிக்கலஸ் சார்கோஸி அந்நாட்டு அரசாங்கத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிக்கலஸ் சார்கோஸி எதிர்கொண்ட வழக்கு இது மாத்திரமல்ல. 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு லிபியாவின் கடாபி அரசாங்கத்திடமிருந்து இரகசியமாக நிதி பெற்றமை, 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலான நிதியை செலவிட்டதுடன், அதை மறைப்பதற்கு முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளையும் சார்கோஸி எதிர்கொண்டுள்ளார்.