தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
முன்னணியின் வன்னி மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளர் எஸ்.தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் முதன்மை அதிதியாகக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார். குறித்த கூட்டத்தில் மழையினையும் பொருட்படுத்தாமல் அதிகளவு மக்கள் கலந்து கொண்டனர்.