வன்னிமாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பு மனுவினை பத்தரமுல்லே சீலரத்தினதேரர் தாக்கல் செய்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜனசெதபெரமுன தனது வேட்புமனுவினை இன்று வெள்ளிக்கிழமை (04) தாக்கல்செய்துள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது கட்சியின் தலைவர் சீலரத்தினதேரர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஏற்கனவே தமிழர்களுக்கான ஆசன ஒதுக்கீடு குறைந்துள்ள சூழலில் தற்போது தேரர்களும் துணிந்து தமிழர் தாயகத்தில் போட்டியிட முன்வந்திருப்பது தமிழர் இருப்பை கேள்விக்குறியாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.