வன்னியில் வீடும், சங்கும் தலா ஒவ்வொரு ஆசனங்களை கைப்பற்றியது!

வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளின் அடிப்படையில் தமிழ் கட்சிகளுக்கு 2 ஆசனம் மட்டுமே கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும்,, இலங்கை தமிழரசு கட்சி 1 ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களை கைவிட்ட அரசியல் கட்சிகளை மக்கள் இம்முறை கைவிட்டுள்ளமையே இத் தேர்தல் முடிவினூடாக புலப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *