கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தின் வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினராசா மதுஸன் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையின் சடலமே வீதியில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சடலம் நேற்று (புதன்கிழமை) இரவு 8.30 மணியலவில் பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலத்தின் வாய் மற்றும் காதில் இரத்தம் வெளியேறிய நிலையில் காணப்பட்டமையால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.