யாழ், மண்டதீவில் கிறிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் குழாம் நேரில் சென்று ஆராய்வு:

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் குழாம் நேரில் சென்று ஆராய்ந்துள்ளது 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்  யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மனாடா யஹம்பத் உள்ளிட்ட குழுவினரே மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும் இதன் போது பேசப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய மைதானத்தின் கட்டுமானத்திற்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் வருகை தந்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

அதேவேளை இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை சந்தித்துள்ளனர் குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தியும் பங்கேற்றிருந்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *