வடக்கில் தொடர்ந்து அமழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது.
இதனால் வீதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்துக்களும், வீதியோர வியாபாரங்களும் பாதிப்படைந்துள்ளது.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை 10 மணி வரையான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.